தன்னம்பிக்கையுடன் வாழும் பார்வை தெரியாத நபர்

தன்னம்பிக்கையுடன் வாழும் பார்வை தெரியாத நபர்

படத்தில் இருக்கும் இந்த நபர் மும்பையைச் சேர்ந்தவர். இவருக்கு 12 வயதிலேயே பார்வை பழுதாகிவிட்டது, இருப்பினும் அவர் தனது தன்னம்பிக்கையை இழக்காமல் பார்வையற்றோர் பள்ளியில் படித்தார், இவர் தற்போது எலக்ட்ரீசியன் பணி செய்து வருகிறார்.

சொந்தத் தொழில் செய்து தனக்கு தேவையான பணத்தை தானே சம்பாதித்து கொண்டு யாரையும் சார்ந்து இல்லாமல் இவர் வாழ்ந்து வருகிறார். பார்வை பறிபோன பின்னர் பிச்சை எடுக்கவோ அல்லது இன்னொருவரை சார்ந்தோ தான் வாழ விரும்பவில்லை என்றும் தான் தற்போது சொந்த தொழில் செய்து தனக்கு தேவையான பொருளை ஈட்டி வருவதாகவும் இவர் ஒரு பேட்டி ஒன்றில் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்

இந்த தன்னம்பிக்கை நல்ல மனிதருக்கு ஒரு சபாஷ் போடுவோம்

Leave a Reply