’தனுஷ் 40’ படத்தின் 40 கோடி ரூபாய் வியாபாரம்: ஆச்சரியத்தில் கோலிவுட்

’தனுஷ் 40’ படத்தின் 40 கோடி ரூபாய் வியாபாரம்: ஆச்சரியத்தில் கோலிவுட்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள ’தனுஷ் 40; திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து பெற்றுள்ளது. அதேபோல் கேரளா, தெலுங்கு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமைகளின் வியாபாரமும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த படம் ரூ.40 கோடிக்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஐந்து முதல் பத்து கோடிக்கு வியாபாரம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply