தனுஷின் ’பட்டாஸ்’ டிரைலர் எப்போது? அதிகாரபூர்வ தகவல்

தனுஷின் ’பட்டாஸ்’ டிரைலர் எப்போது? அதிகாரபூர்வ தகவல்

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த படத்தின் டிரைலர் வரும் நாளை காலை 10.31 மணிக்கு வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகி உள்ளனர்

நீண்ட இடைவெளிக்குப்பின் தனுஷ் மற்றும் சினேகா ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்தப் படத்தை துரைசந்திரசேகர் இயக்கி உள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இந்த படம் தனுஷுக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என கருதப்படுகிறது

Leave a Reply