தனுஷின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவுண்டமணி!

தனுஷ் நடித்து இயக்கிய ’பா.பாண்டி 2’ என்ற திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த செய்தியை உறுதி செய்யப்பட்டுள்ளது

’பா.பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் மிக முக்கிய கேரக்டரில் கவுண்டமணி நடிக்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த ஒரு சில நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

தனுஷ் தற்போது கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை அடுத்து அவர் ’பா.பாண்டி 2’படத்தை இயக்குவார் என தெரிகிறது

Leave a Reply