தனுஷின் அடுத்த மூன்று படங்கள் குறித்த ஆச்சரிய தகவல்

தனுஷின் அடுத்த மூன்று படங்கள் குறித்த ஆச்சரிய தகவல்

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கிவரும் கர்ணன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதனை அடுத்து அவர் நடிக்கவுள்ள இரண்டு படங்கள் குறித்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு தனுஷ் மூன்று திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த மூன்று திரைப்படங்களையும் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த மூன்று திரைப்படங்களை முன்னணி இயக்குனர்கள் இயக்க இருப்பதாகவும் இந்த 3 படங்களின் அறிவிப்புகள் ஒரே நாளில் வெளியாக இருப்பதாகவும் தெரிகிறது. வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு அதே ஆண்டில் இந்த மூன்று படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது

Leave a Reply