தந்தை மீது போலீசில் புகார் அளித்த சிறுவன்!

படத்தில் தோன்றும் இந்த சிறுவன் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர். இவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

தனது தந்தை தனது தாயாரை தினமும் அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை பள்ளிக்கு சென்று படிக்க அனுமதிக்க மறுப்பதாகவும், தனக்கு அடிப்படை தேவைகளை கூட வாங்கி கொடுக்க மறுப்பதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார்.

காவல்நிலைய அதிகாரிகள் அந்த சிறுவனின் தந்தையை கண்டித்து அறிவுரை கூறியதோடு, அந்த சிறுவனுக்கு புதிய உடை, மற்றும் கல்வி கற்க தேவையானவற்றை வாங்கி கொடுத்து அனுப்பினர். தற்போது அந்த சிறுவன் தினமும் பள்ளி சென்று வருகிறார்

Leave a Reply