தந்தை கருணாநிதிக்கு மகள் கனிமொழியின் பிறந்த நாள் டுவிட்!

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கருணாநிதி அவர்களின் 98வது பிறந்தநாளை அடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி அவர்கள் தனது ட்விட்டரில் தந்தை குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும்
அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும்
அவை நினைவுகளால்
நிரம்பி வழிகின்றன