தந்தையை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த மகள்: ஏன் தெரியுமா?

தந்தையை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த மகள்: ஏன் தெரியுமா?

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையை கொலை செய்து தனது வீட்டு தோட்டத்திலேயே புதைத்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பார்பரா கடம்பீஸ் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு தனது தந்தையை கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைத்து விட்டதாக கூறி சமீபத்தில் போலீசில் சரண் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பார்பரா வீட்டுக்கு சென்று அவர் புதைத்ததாக சொன்ன இடத்தில் தோண்டி எலும்புக்கூட்டை கைப்பற்றினர்

இதுகுறித்து பார்பராவை போலீசார் விசாரணை செய்தபோது அவர் கூறியதாவது: எனது தந்தை சிறுவயதில் இருந்தே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னைப் போல பல பெண்களிடம் தவறாக நடந்து இருக்கிறார். 2006-ம் ஆண்டில் அவர் (கெனித்) வைத்திருந்த போட்டோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

ஏனெனில் பல சிறுமிகளின் நிர்வாண போட்டோக்களும் இருந்தது. அதில் என்னுடைய போட்டோவும் இருந்தது. என்னை நிர்வாணமாக்கி பலர் முன்னிலையில் கெனித் போட்டோ எடுத்துள்ளார். இதெல்லாம் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த அவரை கொன்று வீட்டில் புதைத்தே. தந்தையை கொலை செய்து தண்டனையில் இருந்து தப்பியது மனதை உறுத்தியதால் சரண் அடைந்தேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.