தடுப்பு வேலிகள் அமைக்க சிலைகளை உடைப்பதா? பொங்கிய பாஜக

தடுப்பு வேலிகள் அமைக்க சிலைகளை உடைப்பதா? பொங்கிய பாஜக


திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவிலில் தடுப்பு வேலிகள் அமைக்க சிலைகளை உடைத்தது அதிகாரிகளின் பொறுப்பற்ற, அறமற்ற செயல் என்றும், மறந்தும் செய்யக்கூடாதது இத்தகைய பாவச்செயல்கள் என்றும் அவர்தம் வாழ்வில் கேடு விளைவிக்கும் என்றும் பாஜக தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளது

மேலும் இதுகுறித்து ஒரு திருக்குறளையும் அதே பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குறள்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு

தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலையிட்டு பக்தர்கள் மனம்புண்படும்படி செயல் புரிந்த சம்பந்தப்பட்ட பொறுப்பற்ற அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் பாஜக கேட்டுக்கொண்டுள்ளது

Leave a Reply