தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள், மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள், மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் என்றுமே நஷ்டம் அடைந்ததாக சரித்திரம் இல்லை என்று வியாபாரிகள் மத்தியில் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அது மீண்டும் ஒருமுறை உண்மையாகியுள்ளது

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விஷம் போல் ஏறி கொண்டே வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூபாய் 30 ஆயிரத்து 344 என விற்பனையாகி வருகிறது

ஒரே நாளில் ரூபாய் 400க்கு மேல் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு தங்கத்தின் விலை 20 சதவீதம் உயந்த நிலையில் இந்த ஆண்டு அதை விட அதிகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தங்கத்தில் முதலீடு செய்ய அதிக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply