தங்கம் விலை மீண்டும் உயர்வு: 30 ஆயிரத்தை தொடுமா?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,316 ஆகவும், சவரனுக்கு ரூ. 26,528 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து கிராமுக்கு ரூ. 3,617 ஆகவும், சவரனுக்கு ரூ. 28,936 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இன்று வெள்ளி விலை மாற்றம் ஏதும் இல்லாமல் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ. 44.97 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 44,965-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply