தங்கம் விலை ஒரே நாளில் ரூ.504 உயர்வு

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.504 உயர்வு

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.504 உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று கிராமுக்கு 63 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 26 ஆயிரத்து 232 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 10 வாரங்களில் ஆபரண தங்கத்தின் விலை 12 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டுள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அமெரிக்க கரன்ஸியான டாலர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், உள்நாட்டு சந்தையில் தேவைகள் அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு காரணமாகவும் விலை ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை இன்னும் உயரும் என்றே கணிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் விலை ரூ.30 ஆயிரம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

Leave a Reply

Your email address will not be published.