தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் டெல்லி விரைந்ததால் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களின் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரணைக்கு வரவுள்ளதை அடுத்து பதவி பறிக்கப்பட்ட எம்.எல்,ஏக்கள் இன்று மாலை விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். தங்கள் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துவதுடன், பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது

கர்நாடகத்தில் சில பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அமைச்சர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால் கர்நாடகத்தில் பாஜக மூன்றரை ஆண்டுக்காலம் ஆட்சியில் நீடிக்கும் என்பதால் அடுத்தடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அதிருப்தியாளர்களுக்கு முதலமைச்சர் எடியூரப்பா உறுதியளித்துள்ளார்.

Leave a Reply