டொயோட்டா யாரிஸ் முன்பதிவு துவக்கம்

டொயோட்டா யாரிஸ் முன்பதிவு துவக்கம்

டொயோட்டா நிறுவனத்தின் புதிய யாரிஸ் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட யாரிஸ் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டொயோட்டா யாரிஸ் முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரை செலுத்த வேண்டும். டொயோட்டா யாரிஸ் மாடல்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் முன்பதிவு செய்வோரும் மாடல்களை தேர்வு செய்ய முடியாது.

எனினும் தற்சமயம் முன்பதிவு செய்வோர், வெளியீட்டிற்கு பின் காரினை சற்றே முன்னதாக பெற்றுக் கொள்ள முடியும். டொயோட்டா யாரிஸ் 1.5 லிட்டர் பெட்போல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

புதிய டொயோட்டா யாரிஸ் பல்வேறு பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கிறது. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பம்ப்பரில் பகலில் எரியும் எல்இடி லைட்கள், 15-இன்ச் அலாய் வீல் மற்றும் பின்புற கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஏழு ஏர்பேக், EBD, டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் முன்பக்கம் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. உள்புறம் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் மற்றும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இருக்கையை 8 விதங்களில் மாற்றியமைக்கும் வசதி, ரூஃப்-மவுண்ட் செய்யப்பட்ட ஏ.சி., இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் ஆப்ஷன்கள் ஆட்டோமேடிக் வேரியண்ட்-இல் வழங்கப்படுகிறது.

Leave a Reply