டெல்லி தோல்விக்கு பாஜக தலைவர்கள் தான் காரணம்: அமித்ஷா

டெல்லி தோல்விக்கு பாஜக தலைவர்கள் தான் காரணம்: அமித்ஷா

டெல்லி தோல்விக்கு பாஜக தலைவர்களின் தவறான பிரச்சாரம் தான் காரணம் என அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்

சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இது குறித்து அவர் கூறியபோது ’டெல்லி தேர்தலை பொறுத்தவரை என்னுடைய வியூகம் தவறாக மாறிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் பாஜக தலைவர்கள் தவறான முறையில் பிரச்சாரம் செய்தார்கள். குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதிகள் அவர்கள் பேசி இருக்கக் கூடாது என்றும் சிஏஏ எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசியது தவறானது என்றும் கூறினார்

அதே நேரத்தில் டெல்லி மக்கள் பாஜகவை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விடவில்லை என்றும் ஒரு சில தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது என்றும் கூறினார்

மேலும் ஏழு தொகுதிகளில் ஆம் ஆத்மி மூன்றாம் இடத்தைப் பிடித்தது இதிலிருந்து ஒட்டுமொத்தமாக ஆத்மியை மக்கள் ஆதரிக்க வில்லை என்பதுதான் உண்மை என்றும் தெரிவித்தார்

Leave a Reply