டெல்லி தேர்தல் முடிவு: இப்படி ஒரு பச்சை பொய்யை கூறுகிறாரே பாஜக எம்பி?

டெல்லி தேர்தல் முடிவு குறித்து பாஜக எம்பி ஒருவர் பச்சை பொய்யான ஒரு கணக்கை கூறியிருப்பது அரசியல் விமர்சகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

பாஜக எம்பி சத்யதேவ் பச்சோரி என்பவர் தனது டுவிட்டர் இணையதளத்தில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்பை மிகச் சொற்ப வாக்குகளில்தான் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 100 வாக்குகளுக்கும் குறைவாக 8 தொகுதிகளிலும் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாக 19 தொகுதிகளிலும் 2000 வாக்குகளுக்கும் குறைவாக 9 தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது என்றும் ஏற்கனவே 8 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று இருக்கும் நிலையில் இந்த 36 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் 44 தொகுதிகளில் மொத்தம் பாஜக வெற்றி பெற்றிருக்கும் என்று இந்நேரம் டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறிய போது ’இப்படி ஒரு பச்சைப் பொய்யை ஒரு எம்பியே கூறியிருக்கிறாரே டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்த விக்கிபீடியா பக்கத்தை போய்பார்த்தால் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பாஜக இழந்து இருப்பது என்பது தெரியும் என்றும் இவர் கூறிய ஒன்றுகூட உண்மையில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன்பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த டுவீட்டை பாஜக எம்பி நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply