டெல்லியை அடுத்து தமிழகத்தில் ஏழைபெண்களுக்கு இலவச பஸ் பயணம்? பரபரப்பு தகவல்
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் பெண்களுக்கு அவர் அறிவித்த இலவச திட்டங்கள் தான் என்பதும் குறிப்பாக மெட்ரோ ட்ரெயின் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கெஜ்ரிவாலை அடுத்து மேலும் சில மாநிலங்களில் பெண்களுக்கு இலவச பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது . அதுமட்டுமின்றி தமிழகம் உள்பட மேலும் சில மாநிலங்களில் தேர்தல் விரைவில் வர உள்ளதால் பெண்களுக்கு இலவச பயணம் மெட்ரோ ட்ரெயின் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு வெளி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.