டெல்லியில் பிரசாந்த் கிஷோருக்கு கிடைத்த வெற்றி! அடுத்த டார்கெட் தமிழ்நாடு?

டெல்லியில் பிரசாந்த் கிஷோருக்கு கிடைத்த வெற்றி! அடுத்த டார்கெட் தமிழ்நாடு?

டெல்லியில் நேற்று சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளிலும், அரவிந்த் கெஜ்ரிவால் தான் அடுத்த முதல்வர் என்றும் ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் கூறியுள்ளது

அதுமட்டுமின்றி பாஜகவிற்கு 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளது

இந்த நிலையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிக்காக வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவருடைய வியூகத்தை அரவிந்த் கெஜ்ரிவால் கடைப்பிடித்து வந்ததால் தான் இந்த வெற்றி கிடைக்க இருக்கிறது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி அறிவிப்புகள் அனைத்துமே பிரசாந்த் கிஷோர் மூளையிலிருந்து உதித்தவை என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் டெல்லியை அடுத்து தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ள பிரசாந்த் கிஷோர், டெல்லியை போன்று தமிழகத்திலும் வெற்றி பெற்றுக் கொடுப்பாரா? என்பதையும், தமிழக மக்களிடம் பிரசாந்த் கிஷோரின் தந்திரம் எடுபடுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published.