டெல்லியில் ஆட்சி அமைக்க பேரம் ஆரம்பம். 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு?

6டில்லியில் ஆட்சி அமைக்க பாஜக குறுக்கு வழியில் முயன்று வருவதாக ஆம் ஆத்மி குற்றசாட்டியுள்ள நிலையில் டில்லியில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

டில்லி மாநில பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம், டில்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ்,மற்றும் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவில் டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டில்லியில் கடந்த வருடம் டிசம்பரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 31 இடங்களும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 1, சிரோமணி அகாலி தளத்துக்கு 1 இடம் கிடைத்தன. 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க 36 உறுப்பினர்களின் ஆதரவு தேவை, தற்போது காங்கிரஸ் கட்சியின் 8 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தர முன்வந்துள்ளதாகவும் எனவே விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது. பாஜக ஆட்சியை கைப்பற்றா குதிரைபேரத்தில் இறங்கி வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply