டுமிழிசை என்று சொல்வதால் கவலை இல்லை: தமிழிசை

டுமிழிசை என்று சொல்வதால் கவலை இல்லை: தமிழிசை

சமூக வலைத்தள பயனாளிகளால் அதிகம் கலாய்க்கப்படும் நபர்களில் ஒருவர் பாஜக தமிழக தலைவரான தமிழிசை செளந்திரராஜன் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவரது பெயரான தமிழிசையை டுமிழிசை என்று பலர் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து பேட்டி ஒன்றில் தமிழிசை கூறியதாவது:

நான் ஒரு பெண். தேசிய கட்சியின் தலைவர். இன்னும் இப்படி நிறைய நேர்மறை விஷயங்கள் உள்ளன. நான் திறம்பட செயல்பட்டு வருகிறேன். இருந்தாலும் என் மீது தாக்குதல்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏனென்ன்றால், பாஜக தலைவர் ஒருவர் வலிமையானவராக இருப்பதை இங்கு யாரும் விரும்பவில்லை. அதனாலேயே எனது உயரம், தோற்றம், வயது, கூந்தல் என விமர்சனம் செய்கின்றனர். அவர்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

எனது விக்கிப்பீடியா பக்கத்துக்குச் சென்று தமிழிசை என்பதை டுமிலிசை என மாற்றியமைத்துள்ளனர். இப்போதுகூட கண்ட நேரங்களிலும் தொலைபேசி அழைப்பு வருகிறது. இதையெல்லாம் ஓர் ஆண் அரசியல்வாதிக்கு செய்வீர்களா என்பது மட்டுமே எனது கேள்வி.

 

Leave a Reply

Your email address will not be published.