டீக்கடையில் டீ ஆற்றிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எளிமைக்கு அடையாளமாக இருந்து வருவது குறித்து பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில் தற்போது அவர் தனக்கு தானே தேநீர் தயாரித்து கொண்டதோடு மக்களுக்கு வழங்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தத்தபூர் பகுதியில் மக்களை சந்தித்தபோது, திடீரென ஒரு தேநீர் கடைக்கு சென்றார். அங்கு, தேநீர் தயாரித்த மம்தா, அதை பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்.

முன்னதாக மக்களின் வீடுகளுக்கு சென்று சென்று சந்தித்த மம்தா பானர்ஜி, குடிசையில் வாழ்ந்த மூதாட்டி உள்ளிட்ட பலரது வாழ்வு குறித்தும் கேட்டறிந்தார். அந்தப் பகுதியில் இருந்த மக்களுடன் அவர் செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்தார்.

Leave a Reply