டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு: வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் எழுதியவர்களில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவது தெரிந்ததே

இந்த நிலையில் ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி மற்றும் கீழக்கரை வட்டாட்சியர் பிரபு ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்த நிலையில் தற்போது திடுக்கிடும் திருப்பமாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது

இதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட 99 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த 99 பேர்களும் இனிமேல் வாழ்நாள் முழுவதும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply