டிரைவிங் லைசென்ஸ் எடுப்பவர்களுக்கு இனி கவலை இல்லை: ஆர்.டி.ஓ செய்துள்ள புதிய வசதி!

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பவர்களுக்கு இனி கவலை இல்லை: ஆர்.டி.ஓ செய்துள்ள புதிய வசதி!

லைசன்ஸ் எடுக்கும் பலரிடம் சொந்தமாக கார் இருக்காது. எனவே டிரைவிங் லைசன்ஸ் எடுக்க செல்லும் போது அவர்கள் நண்பர்களிடம் கடன் வாங்கி தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் அல்லது டிரைவிங் பள்ளியில் கார் வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்காக டிரைவிங் பள்ளி அதிக கட்டணம் வசூல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வரும் நபர்களின் சங்கடத்தை போக்கும் வகையில் ஆர்டிஓ அலுவலகம் தற்போது கார் வாடகைக்கு விடும் வசதியை செய்து கொடுத்துள்ளது. இதன்படி கார் டிரைவிங் லைசன்ஸ் எடுக்க வருபவர்கள் ரூபாய் 200 மட்டுமே கட்டணம் செலுத்தி கார் வாடகைக்கு எடுத்து டிரைவிங் லைசன்ஸ் பெற்றுக்கொள்ளலாம்

முதல்கட்டமாக இந்த வசதி டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் படிப்படியாக இந்த வசதி நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் விரிவுபடுத்தப்படும் என்றும் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply