டிசம்பரில் வெளியாகும் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள்

டிசம்பரில் வெளியாகும் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி படங்கள்

நவம்பர் 29ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘2.0’ ரிலீஸ் ஆவதை அடுத்து இந்த புயல் ஓய்ந்தவுடன் டிசம்பர் 14 முதல் வரிசையாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளது.

குறிப்பாக டிசம்பர் 14ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ அதே தேதியில் ஜெயம் ரவி நடித்த ‘அடங்கமறு’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருநாளில் தனுஷின் ‘மாரி 2’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘கனா’ ஆகிய படங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதனையடுத்து பொங்கல் தினத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply