டிக்டாக் மோகத்தில் மனைவி: அம்மிக்கலை தலையில் போட்டு கொலை செய்த கணவன்

டிக் டாக் செயலியில் கிட்டத்தட்ட அடிமையாக ராஜேஸ்வரி என்ற பெண்ணை அவரது கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரை சேர்ந்த குமரவேலின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வேலைக்கு கணவரையும், பள்ளிக்கு பிள்ளைகளையும் அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரிக்கு தனிமையை போக்க அறிமுகமானது தான் டிக் டாக்.

ஆரம்பத்தில் அதில் சின்ன சின்ன வீடியோக்களை பார்த்து ரசித்த ராஜேஸ்வரி நாளடைவில் விதவிதமான வீடியோக்கள் எடுத்து அதை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் மனைவி ராஜேஸ்வரி டிக்டாக் வீடியோவுக்கு அடிமையானதால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் குமரவேல் அம்மிக்கலை ராஜேஸ்வரியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்தார்.

Leave a Reply