டிக்டாக் மூலம் சீனா திருடுகிறது. சசிதரூர் எம்பி திடுக் தகவல்

டிக் டாக் செயலி மூலம் முக்கியமான தகவல்களை சீனா திருடுவதாக காங்கிரஸ் பிரமுகரும் திருவனந்தபுரம் தொகுதி எம்பியான சசிதரூர் திடுக் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

நேற்று மக்களவையில் பேசிய சசிதரூர், டிக்டாக் செயலி மூலம் சட்டவிரோதமான முறையில் முக்கியத் தகவல்களை சீனா திருடி வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு உதாரணமாக சமீபத்தில் அமெரிக்கக் குழந்தைகள் குறித்த தகவல்களைத் திருடியதற்காக டிக்டாக் நிறுவனத்திற்கு அந்நாடு 5 புள்ளி 7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். டிக்டாக் மட்டுமின்றி ஸ்மார்ட் போன்களில் மக்களைக் கவரும் செயலிகள் மூலம் முக்கியத் தகவல்கள் திருடப்பட்டு வருவதாகவும் சசிதரூர் குறிப்பிட்டார்.

 

Leave a Reply