டிஎன்பிஎல் கிரிக்கெட்: கோவை அணிக்கு மேலும் ஒரு வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கோவை மற்றும் காரைக்குடி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றி பெற்றது

இந்த போட்டியில் ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து கோவை அணி மொத்தம் 6 புள்ளிகள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply