டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்: அணியில் சிறிய மாற்றம்

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்: அணியில் சிறிய மாற்றம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையே இன்று ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ந்டைபெறவுள்ளது

ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணிக்கு மூன்றாவது வெற்றி கிடைக்குமா? அல்லது தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் இஷாந்த் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் கொல்கத்தாவை சேர்ந்த ஷாபஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.