shadow

டாவோஸ் பயணத்தை திடீரென ரத்து செய்த டிரம்ப்: காரணம் என்ன?

உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்காக டாவோஸ் செல்ல திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென தனது டாவோஸ் பயணத்தை ரத்து செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் முடிவு செய்துள்ள அதிபர் டொனால்டு டிரம்ப் அதற்காக ரூ.39,693 கோடி நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார். ஆனால் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஒப்புதல் பெற முடியவில்லை. இதனால் இந்த் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.

அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கும் நிலையில், டாவோஸ் சுற்றுப்பயணத்தை டிரம்ப் ரத்து செய்துள்ளதாக டொனாட்ல் டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். உலக பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

//twitter.com/realDonaldTrump/status/1083426878336036865

Leave a Reply