டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: தங்கம் விலை உச்சத்தை எட்டியது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய சரிவை அடைந்துள்ளதால் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 264 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 3416கு விற்பனையாகியது. ஒரு சவரன் தங்கம் 27 ஆயிரத்து 328க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவின் பின்னடைவால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

உலக அளவில் பொருளாதார வரிசையில் 2017 ஆம் ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருந்த இந்தியா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் 2018 ஆம் ஆண்டு 7 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply