’டாக்டர்’ வெளியான 8 மணி நேரத்தில் ’அயலான்’: சிவகார்த்திகேயன் சுறுசுறுப்பு

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியான நிலையில் சரியாக எட்டு மணி நேரத்தில் மீண்டும் இன்று இரவு 7 மணிக்கு அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’அயலான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் அறிவித்துள்ளார்

இன்று சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தான் நடித்து வரும் இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

டாக்டர் திரைப்படம் நெல்சன் இயக்கத்திலும், ’அயலான்’ படம் ரவிக்குமார் இயக்கத்திலும் உருவாகி வருகிறது என்பதும், இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply