டக்ளஸ் லீவீஸ் விதி: மே.இ.தீவுகளை மீண்டும் வென்ற இந்தியா

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது

15.3 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் போட்டி 120 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்பதால் இந்திய அணி டக்ளஸ்-லீவிஸ் முறையின்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை அடுத்து இந்திய அணி தொடரை 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply