ஜோதிகாவை கைது செய்ய முதல்வர் அலுவலகத்தில் மனு

ஜோதிகாவை கைது செய்ய முதல்வர் அலுவலகத்தில் மனு

‘நாச்சியார்’ பட டீசரில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் பேசிய நடிகை ஜோதிகாவையும் அந்த படத்தின் இயக்குனர் பாலாவையும் கைது செய்ய கோரி  தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலச்சங்கத்தின் சார்பில், முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவர் லிங்கபெருமாள் கொடுத்துள்ள இந்த மனுவில் கூறியிருப்பதாவது: நடிகை ஜோதிகா, நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள, ‘நாச்சியார்’ திரைப்படத்தின், ‘டீசர்’ சமீபத்தில் வெளியானது. இப்படத்தில், காவல் அதிகாரி வேடத்தில் நடித்துள்ள ஜோதிகா, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, பெண்களின் கவுரவத்தை இழிவுப்படுத்தியும், களங்கப்படுத்தியும் பேசி உள்ளார்.

பெண்களை இழிவுப்படுத்தி பேசி உள்ள, ஜோதிகா, இயக்குனர் பாலா, இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply