ஜோதிகாவுடன் நேருக்கு நேர் மோது லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை ஜோதிகா நடித்து முடித்துள்ள ‘ராட்சசி’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இதே தேதியில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: உங்கள் அனைவரின் சிறந்த வாழ்த்துக்களையும் பெற்று கொண்டு ‘ஹவுஸ் ஓனர்’ ஜூன் 28 அன்று வெளிவரவுள்ளது.

சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடந்த உண்மையான சம்பவம் மற்றும் உண்மையான மனிதர்களின் தாக்கத்தில் உருவான கதை ‘ஹவுஸ் ஓனர்

நடிகர்களும் குழுவினரும் குறைவான ஊதியம் மற்றும் வசதிகளுக்கு ஒப்புக்கொண்டனர். இதனால் அனைத்து நிதியும் தரமான படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டது. 50 லட்சம் செலவில் செட் அமைக்கப்பட்டது. இந்த படம் அட்மாஸ்-ல் மிக்ஸ் செய்யபப்ட்டுள்ளது.

மெதுவாக வளரும் ஒரு த்ரில்லர் திரைப்படம் என்றும் சொல்லலாம். வித்தியாசமான வாழ்க்கை மற்றும் தனித்துவமான ‘பாலக்காடு’ தமிழ் உச்சரிப்பும் நீங்கள் காண்பீர்கள்’

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply