ஜோதிகாவின் படத்தை பார்த்து கேரள அமைச்சர் பாராட்டு

சமீபத்தில் வெளியான ராட்சசி திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்ததோடு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜோதிகாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரள மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பாராட்டியுள்ளார். இந்த படம் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆன போதிலும் நேற்றுதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது என்றும், இந்த படத்தின் ஜோதிகா கீதாராணி என்ற கேரக்டர் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், கல்வி துறையில் உள்ள ஒவ்வொருவரும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் கூறினார்

மேலும் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் என்றும் கல்வித்துறையில் இந்த படம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்

Leave a Reply