ஜெ வீடியோ வழக்கு: முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்த வெற்றிவேல்

ஜெ வீடியோ வழக்கு: முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்த வெற்றிவேல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பு ஜெயலலிதா சிகிச்சை எடுத்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் வெற்றிவே.

தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டது தேர்தல் அத்துமீறல் என்று கூறப்பட்டதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ வெளியிட்டது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி வெற்றிவேல் சற்றுமுன்னர் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர மனுவாக பிற்பகல் 1 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது

Leave a Reply