ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சோபன்பாபு கேரக்டர்: வலுக்கும் எதிர்ப்புகள்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சோபன்பாபு கேரக்டர்: வலுக்கும் எதிர்ப்புகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான’தலைவி’ என்ற படத்தை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதா கேரக்டலும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவுடன் அதிக படங்களில் நடித்த சோபன்பாபு கேரக்டரும் இந்த படத்தில் இருப்பதாகவும், அந்த கேரக்டரில் பிரபல பெங்காலி நடிகர் ஜிஷூ சென்குப்தா அவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து மறைந்த ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக சோபன்பாபு கேர்கடர் இணைக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் 26-ம் தேதி வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.