ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: மருத்துவர் பாலாஜி, மருத்துவர் தர்மராஜன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: மருத்துவர் பாலாஜி, மருத்துவர் தர்மராஜன் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை ஆணையம் முன் சற்று முன்னர் மருத்துவர் பாலாஜி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் தர்மராஜன் ஆகிய இருவரும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்

கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் உள்பட மூன்று தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றபோது ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது தொடர்பாக மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

சென்னை கலசமஹாலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இரண்டு மருத்துவர்களையும் விசாரணை செய்து வருவதாகவும், இந்த விசாரணை குறித்த தகவல்கள் இன்னும் சிலநிமிடங்களில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply