ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் தள்ளுவேன்: ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகச்சாமி ஆணையம் விசாரணை செய்து வருகின்றது. இந்த ஆணையத்தின் பதவிக்காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டும் ஆணையம் இன்னும் விசாரணையை முடிக்கவில்லை

இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக விசாரணை நடத்தும் என்றும், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பதே தனது முதல் பணி என்றும் யார் தடுத்தாலும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை விடமாட்டேன் என்றும் ஆவேசமாக பேசினார்

முக ஸ்டாலினின் இந்த பேச்சு ஜெயலலிதாவின் விசுவாசிகளை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply