ஜெயலலிதா, சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்கள் பாஜகவினர்: மு.க.ஸ்டாலின்

மேகதாதுவில் அணை கட்டும் அனுமதியை கர்நாடகாவுக்கு வழங்கிய பா.ஜ.க.வுடன் தான் அ.தி.மு.க. கூட்டு வைத்துள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கே துரோகம் செய்த பாஜகவினர் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வார்கள் என்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானோர் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றும், வருமான வரித்துறையினர் உள்பட நாங்கள் யாருடைய மிரட்டலையும் கண்டு அஞ்சமாட்டோம் என்றும், தி.மு.க. பனங்காட்டு நரி; சலசலப்புக்கு அஞ்சாது என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்

மேலும் சிபிஐ, வருமானவரித் துறையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் நேரடி பார்வையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தெரிவித்தர்

Leave a Reply