shadow

ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தது உண்மையா? அப்பல்லோ பிரதாப் ரெட்டி பதில்

ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாக ஒரு அமைச்சரை, யாருமே அவரை பார்க்கவில்லை என இரண்டு அமைச்சர்களும் மாறி மாறி கூறி வருவதால் தமிழக அரசு வேறு வழியில்லாமல் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் இதுகுறித்து விசாரணை செய்ய கமிஷன் அமைத்துள்ளது.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் ஹரிபிரசாத் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கமளித்தார்.

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆதாரங்கள் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை ஆணையத்திடம் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மருத்துவமனை பாதுகாப்புக்கான சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளே தங்களிடம் உள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக எந்த உண்மையையும் தாங்கள் மறைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை என்றும், அமைச்சர்கள் சந்தித்தது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply