ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் என தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் என தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணம் என விசாரிக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த சமீபத்தில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் தனது மனுவை வாபஸ் திடீரென வாபஸ் பெறுவதாக கூறினார். இதனையடுத்து அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Leave a Reply