ஜெயம் ரவி படத்தில் இணையும் இமான் -யுவன்

ஜெயம் ரவி படத்தில் இணையும் இமான் -யுவன்

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள ஸ்பேஸ் படமான ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இந்த படத்தின் தீம் பாடலாக இடம்பெறுவதாகவும் இந்த பாடலை யுவனுடன் இணைந்து யோகி பி மற்றும் சுனிதா சாரதி ஆகியோர் பாடியுள்ளதாகவும், இமான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்/

மேலும் இந்த பாடல் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும், இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply