ஜெயம் ரவிக்கு த்ரிஷா அக்காவா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜெயம் ரவிக்கு ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நடிகை த்ரிஷா தற்போது அவருக்கு அக்காவாக நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, ராஜராஜசோழன் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ராஜராஜசோழனின் அக்காவான குந்தவை கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருப்பதாகவும் இதனை அடுத்து ஜெயம் ரவிக்கு அக்காவாக இந்த படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது இதனால் த்ரிஷா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இருப்பினும் குந்தவை கேரக்டர் கார்த்திக் நடித்து வரும் வந்தியத்தேவன் கேரக்டருக்கு ஜோடி என்பதால் இன்னொரு இளம் நடிகருக்கு அவர் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply