ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், மனைவி ராஜினாமா: கடன் நெருக்கடியா?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், மனைவி ராஜினாமா: கடன் நெருக்கடியா?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் இன்று பிற்பகல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவர்களுக்கு சொந்தமான 51 சதவீதம் பங்குகளை கடன் அளித்த வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் கைப்பற்றி, அவற்றை வேறு நபர்களுக்கு விற்று தங்களுக்கு சேர வேண்டிய தொகையை ஈடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டநேர ஆலோசனை மற்றும் விவாதத்துக்கு பின்னரே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் இன்று பிற்பகல் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.