ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் தெலுங்கில் பேசிய முக ஸ்டாலின்

ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்ற நிலையில் இந்த் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த விழாவில் அவர் தெலுங்கில் பேசி அம்மாநில மக்களை ஆச்சரியப்பட வைத்தார்.

அந்தர்கி நமோஸ்காரம் என தெலுங்கில் கூறி தனது உரையை தொடங்கிய ஸ்டாலின் முதலில் தெலுங்கிலும், பின்னர் தமிழிலும் வணக்கம் கூறி அதன் பின்னர் ஆங்கிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நன்றி கூறினார்.

முக ஸ்டாலின் தெலுங்கு பேச்சை ஆந்திர மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும் தமிழே எங்கள் மூச்சு எனக்கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலின் தெலுங்கில் வணக்கம் கூறியது தமிழர்களுக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *