தமிழகத்திலும் நீடிக்கப்படுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு மேற்கு வங்க மாநிலத்தில் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்

இதனை அடுத்து தற்போது மேலும் ஒரு மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் அடுத்து மேலும் சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும், மருத்துவ நிபுணர்களுடன் வரும் 29ஆம் தேதி ஆலோசித்த பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply