ஜூலை 26 வரை ஊரடங்கா? என்னென்ன தளர்வுகள்

தமிழகத்தில் ஜூலை 26 வரை ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தலைமைச் செயலகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்

இந்த ஆலோசனையில் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்து அதன்பின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த வாரம் என்னென்ன கூடுதல் தகவல்கள் அறிவிக்கப்பட உள்ளன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்