ஜூன் 23 முதல் இந்தியா-துபாய் விமானங்கள் இயங்கும்: ஆனால் ஒரு நிபந்தனை!

ஜூன் 23 முதல் இந்திய விமானங்களுக்கு அனுமதி அளித்து துபாய் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜூன் 23 முதல் இந்தியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா உள்பட ஒரு சில நாடுகளின் விமானங்கள் அனுமதிக்கப்படும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

துபாய்க்கு வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் என்றும், துபாய் அரசு விதித்துள்ள ஆறு விதிகளை பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும் துபாய் அரசு பயணிகளுக்கு நிபந்தனை விதித்துள்ளது.