ஜூனியர் என்.டி.ஆருக்கு கொரோனா: வீட்டில் தனிமை

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் தனிமைப்படுத்த கொண்டதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்

தனக்கு கொரோனா பாசிட்டிவ்ஏற்பட்டுள்ளதாகவும் தானும் தனது குடும்பத்தினர்களும் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் ஆனால் பயப்படும்படி எதுவும் இல்லை என்றும் தாங்கள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

ஜூனியர் என்டிஆர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply